சிவன் போற்றி போற்றி தமிழில் Sivan Potri Potri In Tamil

 உ 

சிவன் போற்றி போற்றி தமிழில்  Sivan Potri Potri In Tamil
சிவன் போற்றி போற்றி தமிழில்  Sivan Potri Potri In Tamil 

சிவன் போற்றி போற்றி தமிழில்

Sivan Potri Potri In Tamil


ஓம் வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
ஓம் மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி
ஓம் ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி
ஓம் ஓவாத சத்தத்து ஒளியே போற்றி
ஓம் ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி
ஓம் ஆறங்கம் நால்வேதம் ஆனாய் போற்றி
ஓம் காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி
ஓம் கயிலை மலையானே போற்றி போற்றி 
ஓம் பிச்சாடல் பேயோடு உகந்தாய் போற்றி
ஓம் பிறவி அறுக்கும் பிரானே போற்றி
ஓம் வைச்சாடல் நன்று மகிழ்ந்தாய் போற்றி
ஓம் மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி
ஓம் பொய்ச்சார் புரமூன்றும் எய்தாய் போற்றி
ஓம் போகாது என் சிந்தை புகுந்தாய் போற்றி
ஓம் கச்சாக நாகம் அசைத்தாய் போற்றி
ஓம் கயிலை மலையானே போற்றி போற்றி
ஓம் மருவார் புரமூன்றும் எய்தாய் போற்றி
ஓம் மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி
ஓம் உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
ஓம் உள்ளாகி வாங்கி ஒளித்தாய் போற்றி
ஓம் திருவாகி நின்ற திறமே போற்றி
ஓம் தேசம் பரவப் படுவாய் போற்றி
ஓம் கருவாகி யோடும் முகிலே போற்றி
ஓம் கயிலை மலையானே போற்றி போற்றி
ஓம் வானத்தார் போற்றும் மருந்தே போற்றி
ஓம் வந்து என்தன் சிந்தை புகுந்தாய் போற்றி
ஓம் ஊனத்தை நீக்கும் உடலே போற்றி
ஓம் ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
ஓம் தேனத்தை வார்த்த தெளிவே போற்றி
ஓம் தேவர்க்குந் தேவனாய் நின்றாய் போற்றி
ஓம் கான்தீயாடல் உகந்ந்தாய் போற்றி
ஓம் கயிலை மலையானே போற்றி போற்றி
ஓம் ஊராகி நின்ற உலகே போற்றி
ஓம் ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
ஓம் பேராகி எங்கும் பரந்தாய் போற்றி
ஓம் பெயராது என் சிந்தை புகுந்தாய் போற்றி
ஓம் நீராவியான நிழலே போற்றி
ஓம் நேர்வார் ஒருவரையும் இல்லாய் போற்றி
ஓம் காராகி நின்ற முகிலே போற்றி
ஓம் கயிலை மலையானே போற்றி போற்றி
ஓம் சில்லுறுவாய்ச் சென்று திரண்டாய் போற்றி
ஓம் தேவர் அறியாத தேவே போற்றி
ஓம் புல்லுயிர்க்கும் பூட்சி புணர்ந்தாய் போற்றி
ஓம் போகாது என் சிந்தை புகுந்தாய் போற்றி
ஓம் பல்லுயிராய்ப் பார்தோறும் நின்றாய் போற்றி
ஓம் பற்றி உலகை விடாதாய் போற்றி
ஓம் கல்லுயிராய் நின்ற கனலே போற்றி
ஓம் கயிலை மலையானே போற்றி போற்றி
ஓம் பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி
ஓம் பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி
ஓம் எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய் போற்றி
ஓம் என் சிந்தை நீங்கா இறைவா போற்றி
ஓம் விண்ணும் நிலனும் தீயானாய் போற்றி
ஓம் மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
ஓம் இமையாது உயிராது இருந்தாய் போற்றி
ஓம் என் சிந்தை நீங்கா இறைவா போற்றி
ஓம் உமையான மது அணைத்தாய் போற்றி
ஓம் ஊழி ஏழான ஒருவா போற்றி
ஓம் அமையா அருநஞ்சம் ஆர்ந்தாய் போற்றி
ஓம் ஆதி புராணனாய் நின்றாய் போற்றி
ஓம் சுமையாகி நின்ற கனலே போற்றி
ஓம் கயிலை மலையானே போற்றி போற்றி
ஓம் மூவாய் பிறவாய் இறவாய் போற்றி
ஓம் முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி
ஓம் தேவாதி தேவர் தொழும் தேவே போற்றி
ஓம் சென்றேறி எங்கும் பரந்தாய் போற்றி
ஓம் ஆவா அடியேனுக் கெல்லாம் போற்றி
ஓம் அல்லம் நலிய அலைந்தேன் போற்றி
ஓம் காவாய் கனகத் திரளே போற்றி
ஓம் கயிலை மலையானே போற்றி போற்றி
ஓம் நெடிய விசும்பொடு கண்ணே போற்றி
ஓம் நீள அகலம் உடையாய் போற்றி
ஓம் அடியும் முடியும் இகழிப் போற்றி
ஓம் அங்கும் ஒன்று அறியாமை நின்றாய் போற்றி
ஓம் கொடியவன் கூற்றம் உதைத்தாய் போற்றி
ஓம் கோயிலா என் சிந்தை கொண்டாய் போற்றி
ஓம் கடிய உருமொடு மின்னே போற்றி
ஓம் கயிலை மலையானே போற்றி போற்றி
ஓம் உண்ணாது உறங்காது இருந்தாய் போற்றி
ஓம் ஓதாதே வேதம் உணர்ந்தாய் போற்றி
ஓம் எண்ணா இலங்கைக்கோன் தன்னை போற்றி
ஓம் இறைவிரலால் வைத்துக் கந்த ஈசா போற்றி
ஓம் பண்ணார் இசையின் சொல் கேட்டாய் போற்றி
ஓம் பண்டேயென் சிந்தை புகுந்தாய் போற்றி
ஓம் கண்ணாய் உலகிற்கு நின்றாய் போற்றி
ஓம் கயிலை மலையானே போற்றி போற்றி


ஓம் நமச்சிவாய வாழ்க வாழ்க
ஓம் சற்குருநாதர் வாழ்க வாழ்க
ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க


பௌர்ணமி கிரிவலம் வரும்போது 108 போற்றி படிக்கலாம்


பௌர்ணமி நாளில் கீழ்கண்ட சிவாய போற்றி பாடலாம்


சிவனே சக்தி சக்தியே சிவம்



பௌர்ணமி நாளில் போற்றித் திருத்தாண்டகம் படிக்கலாம்

இங்கே சொடுக்கவும் "போற்றித் திருத்தாண்டகம் "

ஆலயம் செல்லுங்கள் சிவலாயம் வணங்குங்கள்


ஓம் நமசிவாய ஓம் சிவாயநம ஓம் சிவ சிவ

       


கருத்துரையிடுக

0 கருத்துகள்