தில்லையம்பலம் நடராஜா நூற்றியெட்டு போற்றி

 

 

ஓம் அம்பலத்தரசனே போற்றி

ஓம் அருமருந்தானவனே போற்றி

ஓம் அம்மையப்பனே போற்றி

ஓம் அழகனே போற்றி

ஓம் அபயகரத்தனே போற்றி

ஓம் அகத்தாடுபவனே போற்றி

ஓம் அஜபா நடனனே போற்றி

ஓம் அம்பல வாணனே போற்றி

ஓம் அம்ச பரத நடனனே போற்றி

ஓம் அபிஷேகப் பிரியனே போற்றி

ஓம் அர்க்க மலர்ப்பிரியனே போற்றி

ஓம் அருள் தாண்டவனே போற்றி

ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி

ஓம் ஆலவாய்க்கரசனே போற்றி

ஓம் ஆடலரசனே போற்றி

ஓம் ஆனந்த தாண்டவனே போற்றி

ஓம் ஆட்டுவிப்பவனே போற்றி

ஓம் ஆடியடக்குபவனே போற்றி

ஓம் ஆபத்பாந்தவனே போற்றி

ஓம் ஆதி இறைவனே போற்றி

ஓம் இசைஅரசனே போற்றி

ஓம் இன்னிசைப் பிரியனே போற்றி

ஓம் இடப வாகனனே போற்றி

ஓம் ஈர்க்கும் இறைவனே போற்றி

ஓம் ஈர நெஞ்சினனே போற்றி

ஓம் ஈஸ்வர மூர்த்தியே போற்றி

ஓம் உடுக்கை எந்துபவனே போற்றி

ஓம் உன்மத்த நடனனே போற்றி

ஓம் உண்மைப் பொருளே போற்றி

ஓம் உமாதாண்டவனே போற்றி

ஓம் ஊழித்தாண்டவனே போற்றி

ஓம் ஊர்த்துவ தாண்டவனே போற்றி

ஓம் கலையரசனே போற்றி

ஓம் கங்காதர மூர்த்தியே போற்றி

ஓம் கமல நடனனே போற்றி

ஓம் கவுரி தாண்டவனே போற்றி

ஓம் கவுமாரப் பிரியனே போற்றி

ஓம் கண்கண்ட தெய்வமே போற்றி

ஓம் கனக சபையனே போற்றி

ஓம் கருணாமூர்த்தியே போற்றி

ஓம் கங்காவதரண நடனனே போற்றி

ஓம் கால்மாறி ஆடியவனே போற்றி

ஓம் கிங்கிணி பாதனே போற்றி

ஓம் குக்குட நடனனே போற்றி

ஓம் குஞ்சித பாதனே போற்றி

ஓம் கூத்தப்பிரானே போற்றி

ஓம் கூழ் ஏற்றவனே போற்றி

ஓம் சடைமுடியோனே போற்றி

ஓம் சங்கரமூர்த்தியே போற்றி

ஓம் சத்ரு சம்காரனே போற்றி

ஓம் சமர்த்தனே போற்றி

ஓம் சதுர தாண்டவனே போற்றி

ஓம் சந்தியா தாண்டவனே போற்றி

ஓம் சம்கார தாண்டவனே போற்றி

ஓம் சித் சபையோனே போற்றி

ஓம் சிவசக்தி ரூபனே போற்றி

ஓம் சிவகாமி நாயகனே போற்றி

ஓம் சுயம்பு மூர்த்தியே போற்றி

ஓம் சுந்தர தாண்டவனே போற்றி

ஓம் சூலம் ஏந்தியவனே போற்றி

ஓம் சூழ் ஓளியோனே போற்றி

ஓம் ஞான தாயகனே போற்றி

ஓம் ஞானசுந்தர தாண்டவனே போற்றி

ஓம் திரிபுராந்தகனேபோற்றி

ஓம் தில்லைக் கூத்தனே போற்றி

ஓம் திருவாதிரை நாயகனே போற்றி

ஓம் திருவடிவானவே போற்றி

ஓம் திருமுறை பிரியனே போற்றி

ஓம் திருநீரு பூசியவனே போற்றி

ஓம் துயர் துடைப்பவனே போற்றி

ஓம் தேவாதிதேவனே போற்றி

ஓம் நடனசபாபதியே போற்றி

ஓம் நாத வடிவானவனே போற்றி

ஓம் நாகாபரணனே போற்றி

ஓம் நாதாந்த நடனனே போற்றி

ஓம் நிலவணிந்தவனே போற்றி

ஓம் நிர்மலவானனே போற்றி

ஓம் நிருத்தசபையனே போற்றி

ஓம் நூற்றெட்டு தாண்டவனே போற்றி

ஓம் பக்தருக்கு எளியவனே போற்றி

ஓம் பரம தாண்டவனே போற்றி

ஓம் பஞ்சசபையோனே போற்றி

ஓம் பதஞ்சலிக்கருளியவனே போற்றி

ஓம் பஞ்சாட்சரனே போற்றி

ஓம் பாவம் தீர்ப்பவனே போற்றி

ஓம் பிருங்கி நடனனே போற்றி

ஓம் பிரம்படி பட்டவனே போற்றி

ஓம் பிழம்பேந்தியவனே போற்றி

ஓம் புலித்தோல் அணிந்தவனே போற்றி

ஓம் புஜங்கலலித தாண்டவனே போற்றி

ஓம் பித்தா பிறைசூடியவனே போற்றி

ஓம் பிரதோஷ தாண்டவனே போற்றி

ஓம் மண் சுமந்தவனே போற்றி

ஓம் மான் ஏந்தியவனே போற்றி

ஓம் மழு தாங்கியவனே போற்றி

ஓம் மூக்கன் மூர்த்தியே போற்றி

ஓம் முனிதாண்டவனே போற்றி

ஓம் மும்மலம் அறுப்பவனே போற்றி

ஓம் முயலக சம்ஹாரனே போற்றி

ஓம் முக்தி அருள்பவனே போற்றி

ஓம் மூவா முதல்வனே போற்றி

ஓம் ராஜசபையோனே போற்றி

ஓம் ரட்சக தாண்டவனே போற்றி

ஓம் ருத்ர தாண்டவனே போற்றி

ஓம் ருத்ராட்சப் பிரியனே போற்றி

ஓம் குணவிமோசனனே போற்றி

ஓம் விரிசடையோனே போற்றி

ஓம் வையம் வாழ்விப்பாய் போற்றி

  

சிவனே சக்தி சக்தியே சிவம்

 

மேலும் படிக்க

சிவபுராணம் – திருவாசகம் பாடல் வரிகள்

https://sivaneysakthi.blogspot.com/2019/12/blog-post.html


கருத்துரையிடுக

0 கருத்துகள்