சுவாமிமலைப் பதிகம்
திருமணி விளங்கும் கிரீடமணி
வானவர்தினம் துதிசெய் சிந்தாமணி
செப்பரு மனோன்மணி
விருப்பொடு செம்மணி
செழுங்கடகக் கரத்து ஏந்து ஒருமணி
வளம்பெரும் சைவமணி
மான்பால் உதித்த பெண்மணி
வள்ளியாம் ஒண்மணி
வயங்கத் தினைப்புனத்தே
வந்து உலாவும்மணி கடவுள்மணி
குருமணி எனச்சொல்லும்
சுப்பிரமணியப் பெருங்குணமணி
என்இரு கண்மணி
கோதிலாத் தெய்வமணி
அருணகிரிநாதன் வாக்குக்கு
உள்ளம் மகிழ்ந்து கெதியும் தருமணி - நீ
ஆதலால் அடியனேன் மனத்துஇருள் தவிர்த்து
நல்வாழ்வு தருவாய்!
தாமநிலை ஏழ்மருவு மாட மலி நீடெழில்கொள்
சுவாமி மலைவாழ் முருகோனே!
மேலும் படிக்க
ஒளவையார் அருளிய துதி
https://sivaneysakthi.blogspot.com/2016/06/blog-post_12.html
வேலவனின் வேல் நூற்றியெட்டு போற்றி
https://sivaneysakthi.blogspot.com/2019/10/blog-post.html
0 கருத்துகள்