முருகன் பாமாலை தமிழில் அர்ச்சனை

 

 

ஓம் அப்பா போற்றி

ஓம் அபயா போற்றி

ஓம் அன்பே போற்றி

ஓம் அருனே போற்றி

ஓம் அரசே போற்றி

ஓம் அமுதே போற்றி

ஓம் அழகே போற்றி

ஓம் அருவே போற்றி

ஓம் அத்தா போற்றி

ஓம் அறிவே போற்றி

ஓம் ஆதியே போற்றி

ஓம் ஆனந்தா போற்றி

ஓம் ஆறுமுகா போற்றி

ஓம் இளையாய் போற்றி

ஓம் இசையே போற்றி

ஓம் இறைவா போற்றி

ஓம் இனியவா போற்றி

ஓம் ஈசா போற்றி

ஓம் உத்தமா போற்றி

ஓம் உயிரே போற்றி

ஓம் உணர்வே போற்றி

ஓம் உமைபாலா போற்றி

ஓம் எளியோய் போற்றி

ஓம் எண்குணா போற்றி

ஓம் ஏகா போற்றி

ஓம் ஐயா போற்றி

ஓம் ஒளியே போற்றி

ஓம் கந்தா போற்றி

ஓம் கடம்பா போற்றி

ஓம் கருணாளையனே போற்றி

ஓம் கதியே போற்றி

ஓம் கடவுளே போற்றி

ஓம் காங்கேயா போற்றி

ஓம் கார்த்திகேயா போற்றி

ஓம் குகனே போற்றி

ஓம் குமாரா போற்றி

ஓம் குருவே போற்றி

ஓம் குணக்குன்றே போற்றி

ஓம் குஞ்சரிமணாளனே போற்றி

ஓம் சக்தியே போற்றி

ஓம் சரவணா போற்றி

ஓம் சண்முகா போற்றி

ஓம் சர்வலோகா போற்றி

ஓம் சிவகுமாரா போற்றி

ஓம் சிவக்கொழ்ந்தே போற்றி

ஓம் சித்தியே போற்றி

ஓம் சுப்பிரமணியே போற்றி

ஓம் சுடரே போற்றி

ஓம் செங்கல்வராய போற்றி

ஓம் செந்தமிழா போற்றி

ஓம் சைவமணியே போற்றி

ஓம் ஞானபண்டிதா போற்றி

ஓம் தலைவா போற்றி

ஓம் தூய்யமணியே போற்றி

ஓம் துரையே போற்றி

ஓம் துணைவரே போற்றி

ஓம் தூயோய் போற்றி

ஓம் தெய்வமணியே போற்றி

ஓம் தெளிவே போற்றி

ஓம் தேவா போற்றி

ஓம் நல்லோய் போற்றி

ஓம் நாதா போற்றி

ஓம் நிதியே போற்றி

ஓம் புனிதா போற்றி

ஓம் பொன்னே போற்றி

ஓம் பொருளே போற்றி

ஓம் மயில்வாகனா போற்றி

ஓம் முத்துகுமரா போற்றி

ஓம் முருகா போற்றி

ஓம் வடிவேலா போற்றி

ஓம் வள்ளிக்கணவா போற்றி

ஓம் விசாகா போற்றி

ஓம் விதியே போற்றி

ஓம் அகில உலகமும் படைத்தாய் போற்றி

ஓம் அனைத்தும் நீயே ஆனாய் போற்றி

ஓம் அன்னையினும் தயவுடையாய் போற்றி

ஓம் அருளும் பொருளும் தருவாய் போற்றி

ஓம் ஆக்கமும் ஊக்கமும் அருள்வாய் போற்றி

ஓம் ஆதியும் அந்தமும் அற்றாய் போற்றி

ஓம் ஈயென இரவா நிலையருள் போற்றி

ஓம் ஈசன் மகனே நேசா போற்றி

ஓம் உலகினில் எங்கும் உள்ளவா போற்றி

ஓம் உடல் நலம் ஒழுக்கம் அருள்வாய் போற்றி

ஓம் ஊக்கமும் வளர்ச்சியும் தருவாய் போற்றி

ஓம் ஊழ்வினை தனையும் தீரப்பாய் போற்றி

ஓம் எல்லாப்பிணியும் அகற்றுவாய் போற்றி

ஓம் எல்லா வளம் தரும் வள்ளலே போற்றி

ஓம் ஐந்து கரத்தோன் தம்பியே போற்றி

ஓம் ஐந்தொழில் செய்யும் ஆண்டவா போற்றி

ஓம் கலியுக வரத கந்தா போற்றி

ஓம் கரையிலா கருணை கடலே போற்றி

ஓம் செறுக்கினை அருக்கும் கந்தனே போற்றி

ஓம் செம்போற் கழலடி செவ்வேல் போற்றி

ஓம் பஞ்ச பூதங்களைப் படைத்தவா போற்றி

ஓம் பாதகம் அனைத்தும் தீர்ப்பாய் போற்றி

ஓம் பிறப்பு இறப்பு இல்லாத பெரியோய் போற்றி

ஓம் பெருவாழ்வு அளிக்கும் பெம்மான் போற்றி

ஓம் மனநிறைவு அளிக்கும் மன்னா போற்றி

ஓம் மறைகல் போற்றும் மணியே போற்றி

ஓம் முழுமுதற் பொருளே மூலவா போற்றி

ஓம் முக்தி அளிக்கும் முருகனே போற்றி

ஓம் வெவ்வினைத் தீர்க்கும் வேலவா போற்றி

ஓம் வெற்றியை அளிக்கும் வேந்தா போற்றி

ஓம் வேண்டத்தக்கவை அறிவாய் போற்றி

ஓம் வேண்டும் நல்வரம் தருவாய் போற்றி

ஓம் கண்கண்ட தெய்வமே காட்சியே போற்றி

ஓம் கந்தக்கோட்ட முருகா போற்றி போற்றியே

******
 மேலும் படிக்க

கந்தசஷ்டிக்கவசம்

https://sivaneysakthi.blogspot.com/2021/04/blog-post.html

தெய்வமணி மாலை கந்தர் சரணப்பத்து

சிவனே சக்தி சக்தியே சிவம்

சிவனே சக்தி சக்தியே சிவம்
 

முருகன் புகைப்படம் உதவி

unplash.com

 



கருத்துரையிடுக

0 கருத்துகள்