தெய்வமணி மாலை கந்தர் சரணப்பத்து

 தெய்வமணி மாலை கந்தர் சரணப்பத்து

தெய்வமணி மாலை கந்தர் சரணப்பத்து

அருளாளர் அமுதே சரணம்

அழகா அமலா சரணம் சரணம்

பொளா எனை ஆள் புனிதா சரணம்

பொன்னே மணியே சரணம் சரணம்

மருள்வார்க் கரியாய் சரணம் சரணம்

கருணா லயனே சரணம் சரணம்

கந்தா சரணம் சரணம் சரணம் ( 1 )

பண்ணேர் மறையின் பயனே சரணம்

பதியே பரமே சரணம் சரணம்

விண்ணோர் ஒளியே சரணம் சரணம்

வெளின் விளைவே சரணம் சரணம்

உண்ணோர் உயிரே உணர்வே சரணம்

உருவே அருவே உறவே சரணம்

கண்ணே மணியே சரணம் சரணம்

கந்தா சரணம் சரணம் சரணம் ( 2 )

முடியா முதலே சரணம் சரணம்

முருகா குமரா சரணம் சரணம்

வடிவேல் அரசே சரணம் சரணம்

மயிலூர் மணியே சரணம் சரணம்

அடியார்க் கெளியாய் சரணம் சரணம்

அரியாய் பெரியாய் சரணம் சரணம்

கடியாக் கதியே சரணம் சரணம்

கந்தா சரணம் சரணம் சரணம் ( 3 )

பூவே மனமே சரணம் சரணம்

பொருளே அருளே சரணம் சரணம்

கோவே குகனே சரணம் சரணம்

குருவே திருவே சரணம் சரணம்

தேவே தெளிவே சரணம் சரணம்

சிவசண் முகனே சரணம் சரணம்

காவேர் தருவே சரணம் சரணம்

கந்தா சரணம் சரணம் சரணம் ( 4 )

நடவும் தனிமா மயிலோய் சரணம்

நல்லார் புகழும் வல்லோய் சரணம்

திடமும் திருவும் தருவோய் சரணம்

தேவர்க் கரியாய் சரணம் சரணம்

தடவண் புயனே சரணம் சரணம்

தனிமா முதலே சரணம் சரணம்

கடவுள் மணியே சரணம் சரணம்

கந்தா சரணம் சரணம் சரணம் ( 5 )

கோலக் குறமான் கணவா சரணம்

குலமா மணியே சரணம் சரணம்

சீலத் தவருக் கருள்வோய் சரணம்

சிவனார் புதல்வா சரணம் சரணம்

ஞாலத் துயர்தீர் நலனே சரணம்

நடுவா கிய நல்ஒளியே சரணம்

காலன் தெறுவோய் சரணம் சரணம்

கந்தா சரணம் சரணம் சரணம் ( 6 )

நங்கட் கினியாய் சரணம் சரணம்

நந்தா உயர்சம் பந்தா சரணம்

திங்கட் சடையோன் மகனே சரணம்

சிவைதந் தருளும் புதல்வா சரணம்

துங்க சுகம்நன் றருள்வோய் சரணம்

சரர்வாழ்த் திடுநம் துரையே சரணம்

கங்கைக் கொருமா மதலாய் சரணம்

கந்தா சரணம் சரணம் சரணம் ( 7 )

ஒளியுள் ஒளியே சரணம் சரணம்

ஒன்றே பலவே சரணம் சரணம்

தெளியும் தெருளே சரணம் சரணம்

சிவமே தவமே சரணம் சரணம்

அளியும் கனியே சரணம் சரணம்

அமுதே அறிவே சரணம் சரணம்

களியொன் றருள்வோய் சரணம் சரணம்

கந்தா சரணம் சரணம் சரணம் ( 8 )

மன்னே எனைஆள் வரதா சரணம்

மதியே அடியேன் வாழ்வே சரணம்

பொன்னே புனிதா சரணம் சரணம்

புகழ்வார் இதயம் புகுவாய் சரணம்

அன்னே வடிவேல் அரசே சரணம்

அறுமா முகனே சரணம் சரணம்

கன்னேர் புயனே சரணம் சரணம்

கந்தா சரணம் சரணம் சரணம் ( 9 )

வேதப் பொருளே சரணம் சரணம்

விண்ணோர் பெருமான் சரணம் சரணம்

போதத் திறனே சரணம் சரணம்

புனைமா மயிலோய் சரணம் சரணம்

நாதத் தொலியே சரணம் சரணம்

நவையில் லவனே சரணம் சரணம்

காதுக் கினிதாம் புகழோய் சரணம்

கந்தா சரணம் சரணம் சரணம் ( 10 )

சிவசண்முக சிவஞானதேசிகன் திருவடி வாழ்க 

சிவனே சக்தி சக்தியே சிவம்
அருள் தரும் அருள்மிகு கந்தக்கோட்ட முத்துக் குமாரசுவாமி 

வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகா

சிவனே சக்தி சக்தியே சிவம்

கந்த சஷ்டி கவசம் படிக்க

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்