இறை மந்திரம் இறைவனால் சொல்லப்பட்டு மனிதனால் இயற்றப்பட்டது. மனிதன் சொல்ல இறைவனால் இயற்றப்பட்ட மந்திரமும் உண்டு.நாம் நம்மைத் தினமும் உற்சாகப் படுத்தி கொள்ளவும், மன நிம்மதி அடையவே நம் முன்னோர்கள் நமக்கு ஏற்படுத்திக் கொடுத்த ஒரு அற்புத வாய்ப்பு.
உச்சரிக்க முடியாத கடுமையான மந்திரங்களைச் சொல்லி நம்மை நாமே மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டாம்.இறைவன் நம்மை மந்திரம் சொல்லி வழிபடச் சொல்லவில்லை.சொல்வதால் மன நிம்மதி நமக்கு உண்டாகும் என்ற திருப்தி இறைவனால் நமக்குக் கிடைக்கும்.
சந்தோசமாய் இறை மந்திரம் தினமும் சொல்வதால் ஏகப்பட்ட நன்மைகள் நமக்கு இறை அருளால் கிடைக்கப்பெறும்.இறை மந்திரம் சொல்லும்போது நமக்குள் ஒரு இனம்புரியாத உணர்வு ஒன்று கிடைக்கப்பெறும், அதுதான் ஆற்றல்.
மொழி புரியாமல் எதோ இறைவனை நினைத்து மிகவும் வருந்தி மந்திரம் சொல்லவதை விட அவரவர் தாய்மொழியில் அவரவர் இறை வழிபாட்டுக்கு என்ன மந்திரம் உள்ளதோ அவையே இறை மந்திரமாக உற்சாகமாகச் சொல்லி வழிப்படலாம், இறை அருள் நிச்சயம் கிடைக்க பெறுவீர்.
கீழ்க்கண்ட இறை மந்திரங்கள் சுலபமாகச் சொல்லி இறையை வழிபடலாம்.
விநாயகர் மந்திரம்
'கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பஷூதம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்'
'சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம்
சதுர்புஜம்
ப்ரசன்னவதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே'
மேலும் நேரம் கிடைக்க பெறும் போதெல்லாம் கணபதி போற்றி படிக்கலாம்
குரு மந்திரம்
'குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வராஹ;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ'
மகாவிஷ்ணு
'ஓம் நாராயணாய வித்மஹே
வாசு தேவாய தீமஹி தந்தோ
விஷ்ணு ப்ரசோதயாத்'
மேலும் நேரம் கிடைக்க பெறும் போதெல்லாம் திருப்பதி ஏழுமலையான் நூற்றியெட்டு போற்றி படிக்கலாம்
ஹயக்ரீவர்
'ஞானாந்தம்மயம் தேவம்
நிர்மல ஸ்படிகாக்ருதிம் ஆதாரம்
ஸர்வவித்யானாம் ஹயக்ரீவ
முபாஸ்மஹே'
மேலும் நேரம் கிடைக்க பெறும் போதெல்லாம் கல்வியில் சிறக்க ஹயக்ரீவர் மந்திரம் படிக்கலாம்
குரு கவச பாடல்
'குணமிகு வியாழ குருபகவானே
மணமுள வாழ்வை மகிழ்வுடன் அருள்வாய்
பிரகஸ்பதி வியாழ பர குரு நேசா
கிரக தோஷமின்றிக் கடாட்சித் தருள்வாய்'
சூரிய பகவான்
'ஓம் நமோ ஆதித்யாய
ஆயுள், ஆரோக்கியம்,
புத்திர் பலம் தேஹிமே சதா'
புவனேஸ்வரி அம்மன் மந்திரம்
'ஓம் ஸ்ரீம்
ஹ்ரீம் ஸ்ரீம்
புவனேஸ்வர்யை நமஹ'
மேலும் நேரம் கிடைக்க பெறும் போதெல்லாம் துர்க்கையம்மன் நூற்றியெட்டு போற்றி படிக்கலாம்
முருகப்பெருமான்
'சிறப்புறு மணியே செவ்வாய் தேவே
குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ
மங்கள செவ்வாய் மலரடி போற்றி
அங்கா ரகனே அவதிகள் நீக்கு'
சரஸ்வதி தேவி
'ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே
ஸர்வ ஸித்தீச தீமஹி
தன்னோ வாணீ ப்ரசோதயாத்'
ஆஞ்சநேயர் மந்திரம்
'ஓம் ஆஞ்சனேயாய வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தந்நோ ஹனுமன் ப்ரசோதயாத்'


0 கருத்துகள்
நன்றி என் வலைப்பதிவைப் படித்தமைக்கு
இந்தப் பதிவைப் படிக்கும்
“ வாசகர் - வாசகிகள்“ அனைவரும்
இந்தப் பதிவின் கீழ் இருக்கும்
“ பின்னூட்டம் பெட்டி“ (comment box) யில்
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.
வேண்டுகோள் இது