ஓம் அரசமரத்தடி அமர்ந்தவனே போற்றி
ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி
ஓம் அருகம் புல் ஏற்பவனே போற்றி
ஓம் அச்சம் தவிர்ப்பவனே போற்றி
ஓம் ஆணை முகத்தவனே போற்றி
ஓம் ஆதிமூலம் ஆனவனே போற்றி
ஓம் ஆனந்த வடிவினனே போற்றி
ஓம் இமவான் சந்ததியே போற்றி
ஓம் இடர் களைபவனே போற்றி
ஓம் ஈசன் புதல்வனே போற்றி
ஓம் ஈகை நெஞ்சினனே போற்றி
ஓம் உண்மை தெய்வமே போற்றி
ஓம் உச்சிப்பிள்ளையாரே போற்றி
ஓம் எளிய மனத்தினனே போற்றி
ஓம் எருக்கம் பூ ஏற்பவனே போற்றி
ஓம் எங்கும் நிறைந்தவனே போற்றி
ஓம் ஏழைப் பங்களானே போற்றி
ஓம் ஏற்றம் தருபவனே போற்றி
ஓம் ஏகதந்த மூர்த்தியே போற்றி
ஓம் ஐங்கரத்தானே போற்றி
ஓம் ஐயம் தீர்ப்பவனே போற்றி
ஓம் ஒப்பில்லாதவனே போற்றி
ஓம் ஒருகை முகனே போற்றி
ஓம் ஒளி வடிவானவனே போற்றி
ஓம் ஓங்காரப் பொருளே போற்றி
ஓம் கருணாமூர்த்தியே போற்றி
ஓம் கரணம் ஏற்பவனே போற்றி
ஓம் கணசே மூர்த்தியே போற்றி
ஓம் கணநாதனே போற்றி
ஓம் கண்கண்ட தெய்வமே போற்றி
ஓம் கலியுகக் கடவுளே போற்றி
ஓம் கற்பக விநாயகனே போற்றி
ஓம் கந்தனுக்கு சோதரனே போற்றி
ஓம் காகமாக வந்தவனே போற்றி
ஓம் காவேரி தந்தவனே போற்றி
ஓம் கிருபா சமுத்திரமே போற்றி
ஓம் கீர்த்தி அளிப்பவனே போற்றி
ஓம் குறை தீர்ப்பவனே போற்றி
ஓம் குணக் கடலே போற்றி
ஓம் குற்றம் பொறுப்பாய் போற்றி
ஓம் கூக்குரல் கேட்பாய் போற்றி
ஓம் கூத்தனின் மகனே போற்றி
ஓம் கொழுக்கட்டை பிரியனே போற்றி
ஓம் சக்தி விநாயகனே போற்றி
ஓம் சடுதியில் வருவாய் போற்றி
ஓம் சங்கரன் பிள்ளாய் போற்றி
ஓம் சங்கடம் தீர்ப்பாய் போற்றி
ஓம் சதுர்த்தி நாயகனே போற்றி
ஓம் சித்தி விநாயகனே போற்றி
ஓம் சிறுகண் கொண்டவனே போற்றி
ஓம் செல்வ விநாயகா போற்றி
ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி
ஓம் சுருதிப் பொருளே போற்றி
ஓம் சுந்தர வடிவாய் போற்றி
ஓம் செவி சாயப்பவனே போற்றி
ஓம் ஞாலம் காப்பாய் போற்றி
ஓம் ஞான முதல்வனே போற்றி
ஓம் தந்தம் இழந்தாய் போற்றி
ஓம் தும்பிக்கை உடையாய் போற்றி
ஓம் துயர் துடைப்பாய் போற்றி
ஓம் தெருவில் இருப்பாய் போற்றி
ஓம் தேவாதி தேவனே போற்றி
ஓம் தொந்தி கணபதியே போற்றி
ஓம் தொப்பையப்பவனே போற்றி
ஓம் தோணியாய் வருவாய் போற்றி
ஓம் தோன்றாத் துணையே போற்றி
ஓம் நம்பிக்கு அருளினாய் போற்றி
ஓம் நவசக்தி விநாயகா போற்றி
ஓம் நர்த்தன விநாயகா போற்றி
ஓம் நான்மறை வித்தகா போற்றி
ஓம் நீறு அணிந்தாய் போற்றி
ஓம் நீர்க்கரை அமர்ந்தாய் போற்றி
ஓம் பழத்தை வென்றாய் போற்றி
ஓம் பாரதம் எழுதினாய் போற்றி
ஓம் பரம்பொருளானாய் போற்றி
ஓம் பரிபூரணனே போற்றி
ஓம் பஞ்சமுக விநாயகா போற்றி
ஓம் பாசாங்குச பாணியே போற்றி
ஓம் பாலச்சந்திர விநாயகா போற்றி
ஓம் பிரம்மச்சாரி ஆனாய் போற்றி
ஓம் பிரணவ சொரூபனே போற்றி
ஓம் பிள்ளைக் கடவுளே போற்றி
ஓம் பிள்ளையார்பட்டியானே போற்றி
ஓம் பிறவிப்பிணி தீரப்பாய் போற்றி
ஓம் புண்ணிய மூர்த்தியே போற்றி
ஓம் பேதம் அறுப்பாய் போற்றி
ஓம் மஞ்சளில் இருப்பாய் போற்றி
ஓம் மகிமை அளிப்பாய் போற்றி
ஓம் மகாகணபதியே போற்றி
ஓம் முக்குறுணி விநாயகா போற்றி
ஓம் முறக்காது உடையாய் போற்றி
ஓம் முழுமுதல் கடவுளே போற்றி
ஓம் முக்காலம் அறிவோய் போற்றி
ஓம் முக்கண்ணன் மகனே போற்றி
ஓம் மூலப் பொருளோனே போற்றி
ஓம் மூத்த பிள்ளையே போற்றி
ஓம் மூஞ்சுறு வாகனனே போற்றி
ஓம் மோதகப் பிரியனே போற்றி
ஓம் வல்லப கணபதியே போற்றி
ஓம் வன்னி விநாயகனே போற்றி
ஓம் வரம் தருபவனே போற்றி
ஓம் வலம் வந்தவனே போற்றி
ஓம் விக்னம் தீர்ப்பாய் போற்றி
ஓம் வியாசர் சேவகனே போற்றி
ஓம் விடலை ஏற்பாய் போற்றி
ஓம் வெற்றி அளிப்பாய் போற்றி
ஓம் வேத முதல்வனே போற்றி
ஓம் வையம் வாழ்விப்பாய் போற்றி போற்றி
நம்பிக்கையுடன் போற்றினால்
தும்பிக்கையானின் அருளை பெறலாம்
மேலும் கணபதி போற்றி
0 கருத்துகள்