கணபதி துதி

உ 

கணபதி துதி கணபதி மந்திரம்



கணபதி மந்திரம் 


ஸதா பாலரூபாபி விக்னாத்ரிஹந்த்ரீ

மஹா தந்தி வக்த்ராபி பஞ்சா ஸ்யமான்யா!

விதீந்த்ராதிம்ருக்யா கணேஸாபிதானா

விதத்தாம் ஸ்ரியம் காபி கல்யாண மூர்த்தி!!

பொருள் : எந்நேரமும் மழலை முக வடிவம் கொண்டவரே!

பிரச்னைகளைத் தகர்ப்பவரே!மலைகளைப் பிளக்கும் 

சக்தி உடையவரே! ஆனை வடிவம் கொண்டவரே!

சிவபெருமான் என்னும் சிங்கத்தால் போற்றப்படுபவரே

கொண்டவரே!தேவாதி தேவர்களுக்கு

வணக்கத்துக்குரியவரே! கணேச மூர்த்தியே 

எங்களுக்கு மங்களம் அருள் புரிவீராக!

 

பிள்ளையார் பாடல்  

குள்ளக் குள்ளனே

குண்ட வயிறனே

வெள்ளைப் பிள்ளையாரே

விநாயக மூர்த்தியே

கருத்தப் பிள்ளையாரே

கற்பக மூர்த்தியே

செவ்வத்தப் பிள்ளையாரே

செண்பக மூர்த்தியே

ஐந்து கரத்தனை யானை முகத்தனை

இந்தின் இளம் பிறைபோலும்

எயிற்றனை

நந்தி மகன்தனை ஞானக்

கொழுந்தினைப்

புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே

 

- திருஞானசம்பந்தர் அருளியது  

 





கருத்துரையிடுக

0 கருத்துகள்