உ
விநாயகர் துதி
கணபதி ஸ்லோகம்
ஐந்து கரத்தனை ஆணை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்ற ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே
நவக்கிரக துதி
சூரிய துதி
சீலமாய் வாழச் சீரருள் புரியும்
ஞாலம் புகழும்
ஞாயிறே போற்றி
சூரியா போற்றி
சுந்தரா போற்றி
வீரியா போற்றி
வினைகள் களைவாய்
ஞாலம் காக்கும்
ஞாயிறே போற்றி
நாளும் நன்றே
நல்குவாய் போற்றி
சீலம் எல்லாம்
சேர்ப்பாய் போற்றி
காலம் முழுவதும்
அருள்வாய் போற்றி
சந்திரன் துதி
அலைகடல் அதனினின்று
மதியும் வந்து உதித்தபோது
கலை வளர் திங்களாகக்
கடவுளர் எவருமேத்தும்
சிலைநுதல் உமையாள்பங்கன்
செஞ்சடைபிறையாம் மேரு
மலை வலமாக வந்த மதியமே
போற்றி ! போற்றி !
எங்கள் குறைகள்
எல்லாம் தீர்க்கும்
திங்களே போற்றி
திருவருள் புரிவாய்
சந்திரா போற்றி
சற்குணா போற்றி
சங்கடம் தீர்க்கும்
சதுரா போற்றி
செவ்வாய் துதி
சிறுப்புரு மணியே
செவ்வாய்த் தேவே
குறைவிலாது அருள்வாய்
குணமுடன் வாழ மங்கலச்
செவ்வாய் மலரடி போற்றி
அங்காரகனே அவதிகள் நீக்கு
வசனம் நல் தைரியத்தோடு
மன்னர்தம் சபையில் வார்த்தை
புச பல பராக்கிரமங்கள்
போர்தனில் வெற்றி ஆண்மை
நிசமுடன் அவரவர்க்கு
நீள் நிலம்தனில் அளிக்கும்
குசன் நில மகனாம் செவ்வாய்
குறை கழல் போற்றி ! போற்றி !
புதன் துதி
இதமுற வாழ இன்னல்கள்
நீக்கும் புதபகவானே
பொன்னடி போற்றி
பதம் தந்தருள்வாய்
பண்ணொளியானே உதவியே
அருள்வாய் உத்தமா போற்றி
புண்ணிய திருமுக
புதனே போற்றி
நுண்ணிய கலைகளை
அளிப்பாய் போற்றி
எண்ணிய பணிகளை
முடிப்பாய் போற்றி
திண்ணிய பயன்களை
அருள்வாய் போற்றி
குரு துதி
குணமிகு வியாழ குருபகவானே !
மணமுள வாழ்வை
மகிழ்வுடன் அருள்வாய் !
பிரகஸ்பதி வியாழ பர குரு நேசா !
கிரக தோசமின்றிக்
கடாட்சித் தருள்வாய் !
மறைமிகு கலைநூல் வல்லோன்
வானவர்க்கு அரசன் மாதிரி
நறை சொதி கற்பகப் பொன்
நாட்டினுக்கு அதிபனாகி
நிறைதனம் சிவிகை மண்ணில்
நீடு போகத்தை நல்கும்
இறையவன் குரு வியாழன்
இருமலர்ப் பாதம் போற்றி !
சுக்கிர துதி
சுக்கிர மூர்த்தி சுபம்மிக ஈவாய்
வக்கிரமின்றி வரம்
மிகத் தருவாய்
வெள்ளிச் சுக்கிர
வித்தக வேந்தே
அள்ளிக் கொடுப்பாய்
அடியார்க்கு அருளே
மூர்க்கவான் சூரன் வாணன்
முதலினோர் குருவாய் வையங்
காக்க வான் மழை பெய்விக்கும்
கவிமகன் கனகம் ஈவோன்
தீர்க்க வானவர்கள் போற்றச்
செத்தவர் தமை எழுப்பும்
பார்க்கவன் சுக்கிராச்சாரி
பாத பங்கயமே போற்றி !
சனி துதி
சங்கடம் தீர்க்கும் சனி பகவானே
மங்களம் பொங்க
மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றி சனிஸ்வரத் தேவா
இச்செகம் வாழ
இன்னருள் தா ! தா !
முனிவர்கள் தேவர்கள் ஏபு
மூர்த்திகள் முதலினோர்கள்
மனிதர்கள் சகலர் வாழ்வும் உன்
மகிமையது அல்லாலுண்டோ
கனிவுள தெய்வம் நீயே
கதிர்ச் சேயே காகமேறும்
சனியனே உனைத் துதிப்பேன்
தமியனேற்கருள் செய்வாயே
ராகு துதி
வாகு வார் நெடுமால் முன்னம்
வானவர்க்கு அமுதம் ஈயப்
போகுமக் காலை உன்றன்
புணர்ப்பினால் சிரமே அற்றுப்
பாகுசேர் மொழியாள் பங்கள்
பரன்கையால் மீண்டும் பெற்ற
ராகுவே உனைத் துதிப்பேன்
சட்சியும் ரட்சிப்பாயே
தண்மதி விழுங்கிய
ராகுவே போற்றி
துன்மதி நினைப்பினை
அறுப்பாய் போற்றி
என்மதி துலங்கிட
முயல்வாய் போற்றி
நிம்மதி நிலவிட
அருள்வாய் போற்றி !
கேது துதி
பலாச புஷ்பஸ்ங்காசம்
தாரகாக்ரஹ மஸ்தகம்
ரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம்
தம் கேதும் ப்ரணமாம் யஹம்
நிறைமதி குறைத்த
கேதுவே போற்றி
தலைவிதி எழுத்தை
கலைப்பாய் போற்றி
பிறைபோல் சூழ்நலம்
வளர்ப்பாய் போற்றி
குறையெலாம் மறைந்திட
அருள்வாய் போற்றி !
0 கருத்துகள்