குபேரன் நூற்றியெட்டு 108 போற்றி

 உ 

கணபதி துதி 

திகட சக்கரச் செம்முகம் ஐந்து உளான் 

சகட சக்கரத் தாமரை நாயகன்

அகட சக்கர விண்மணி யாவுறை

விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்

- கச்சியப்ப ஸ்வாமிகள் அருளியது.

குபேர லக்ஷ்மி ஸ்லோகம்

திருமால் மார்பில் வாழும் லக்ஷ்மி

ஸ்ரீ வைகுண்டம் ஆளும் லக்ஷ்மி

தேவர்கள் போற்றும் மகாலக்ஷ்மி

திருவருள் புரிய இல்லம் வா.

குபேரன் நூற்றியெட்டு 108 போற்றி
குபேரன் நூற்றியெட்டு 108 போற்றி 

குபேரன் நூற்றியெட்டு 108 போற்றி

தனம் தந்து காத்திடுவாய் தனபதியே போற்றி

குறைவிலா வாழ்வளிப்பாய் குபேரனே போற்றி

உறைந்திடுவாய் நீ இங்கே உத்தமனே போற்றி

சங்கநிதி பதுமநிதி சார்ந்து நிற்பாய் போற்றி

மங்களங்கள் தந்து எமை மகிழ்விப்பாய் போற்றி

பொங்கிடும் நலம் யாவும் உன்னருளே போற்றி

தங்கிடச் செய்வாய் செல்வம் போற்றினோம் போற்றி

அளகாபுரி அரசே போற்றி

ஆனந்தம் தரும் அருளே போற்றி

இன்பவளம் அளிப்பாய் போற்றி

ஈடில்லாப் பெருந்தகையே போற்றி

உகந்து அளிக்கும் உண்மையே போற்றி

ஊக்கம் அளிப்பவரே போற்றி

எளியோனுக்கு அருள்பவனே போற்றி

ஏழ்மை நிலை அகற்றுவாய் போற்றி

ஐஸ்வர்யம் அளிப்பவரே போற்றி

ஒன்பது நிதி பெற்றவரே போற்றி

ஓங்கார பக்தரே போற்றி

கருத்தில் நிறைந்தவரே போற்றி

கனகராஜரே போற்றி

கனகரத்தினமே போற்றி

காசு மாலை அணிந்தவரே போற்றி

கிந்நரர்கள் தலைவரே போற்றி

கீர்த்தி அளிப்பவரே போற்றி

கீரிப்பிள்ளைப் பிரியரே போற்றி

குருவாரப் பிரியரே போற்றி

குணம் தரும் குபேரா போற்றி

குறை தீர்க்கும் குபேரா போற்றி

கும்பத்தில் உறைபவரே போற்றி

குண்டலம் அணிந்தவரே போற்றி

குபேர லோக நாயகரே போற்றி

குன்றாத நிதி அளிப்பாய் போற்றி

கேடுதனை நீக்கிடுவாய் போற்றி

கேட்டவரம் அளிப்பவரே போற்றி

கோடி நிதி அளிப்பவரே போற்றி

சங்க நிதியைப் பெற்றவரே போற்றி

சங்கரர் தோழரே போற்றி

சங்கடங்கள் தீர்ப்பவரே போற்றி

சமயத்தில் அருள்பவரே போற்றி

சத்திய சொரூபரே போற்றி

சாந்த சொரூபரே போற்றி

சித்ரலேகா மணாளரே போற்றி

சிந்தையில் உறைபவரே போற்றி

சிந்திப்போர்க்கு அருள்பவரே போற்றி

சீக்கிரம் தனம் அளிப்பாய் போற்றி

சிவபூஜை பிரியரே போற்றி

சிவபக்த நாயகரே போற்றி

சிவ மஹா பக்தரே போற்றி

சுந்தரர் பிரியரே போற்றி

சுந்தர நாயகரே போற்றி

சூர்பனகா சகோதரரே போற்றி

செந்தாமரைப் பிரியரே போற்றி

செல்வ வளம் அளிப்பவரே போற்றி

செம்மையான வாழ்வளிப்பாய் போற்றி

சொர்ணவளம் அளிப்பவரே போற்றி

சொக்கநாதர் பிரியரே போற்றி

சௌந்தர்ய ராஜரே போற்றி

ஞான குபேரரே போற்றி

தனம் அளிக்கும் தயாபரா போற்றி

தான்ய லெக்ஷ்மியை வணங்குபவரே போற்றி

திகட்டாமல் அளித்திடுவாய் போற்றி

திருவிழி அழகரே போற்றி

திருவுரு அழகரே போற்றி

திருவிளக்கில் உறைவாய் போற்றி

திருநீறு அணிபவரே போற்றி

தீயவை அகற்றுவாய் போற்றி

துன்பம் தீர்த்திடுவாய் போற்றி

தூயமனம் படைத்தவரே போற்றி

தென்னாட்டில் குடி கொண்டாய் போற்றி

தேவராஜரே போற்றி

பதுமநிதி பெற்றவரே போற்றி

பரவச நாயகரே போற்றி

பச்சை நிறப் பிரியரே போற்றி

பௌர்ணமி நாயகரே போற்றி

புண்ணிய ஆத்மரே போற்றி 

புண்ணியம் அளிப்பவரே போற்றி

புண்ணிய புத்திரரே போற்றி

பொன்னிற முடையோரே போற்றி

பொன் நகை அணிபவரே போற்றி

புன்னகை அரசே போற்றி

பொறுமை கொடுப்பவரே போற்றி

போகம்பல அளிப்பவரே போற்றி

மங்கல முடையோரே போற்றி

மங்களம் அளிப்பவரே போற்றி

மங்களத்தில் உறைவாய் போற்றி

மீனலக்னத்தில் உதித்தாய் போற்றி

முத்துமாலை அணிபவரே போற்றி

மோகன நாயகரே போற்றி

வறுமை தீர்ப்பவரே போற்றி

வரம் பல அருள்பவரே போற்றி

விஜயம் தரும் விவேகரே போற்றி

வேதம் போற்றும் வித்தகா போற்றி

வைர மாலை அணிபவரே போற்றி

வைகுண்டவாசப் பிரியரே போற்றி 

நடராஜர் பிரியரே போற்றி

நவதான்யம் அளிப்பவரே போற்றி

நவரத்தினப் பிரியரே போற்றி

நித்தியம் நிதி அளிப்பாய் போற்றி

நீங்காத செல்வம் அருள்வாய் போற்றி

வளம்யாவும் தந்திடுவாய் போற்றி

ராவணன் சோதரனே போற்றி

வடதிசை அதிபதியே போற்றி

ரிஷி புத்திரரே போற்றி

ருத்திரப் பிரியரே போற்றி

இருள் நீக்கும் இன்பரே போற்றி

வெண்குதிரை வாகனரே போற்றி

கைலாயப் பிரியரே போற்றி

மனம் விரும்பும் மன்னவரே போற்றி

மணிமகுடம் தரித்தவரே போற்றி

மாட்சிப் பொருளோரே போற்றி

யந்திரத்தில் உறைந்தவரே போற்றி

யெளவன நாயகரே போற்றி

வல்லமை பெற்றவரே போற்றி

குபேரா போற்றி போற்றி 

#ganapathi, #lakshmi, #kubera, #potri        

மேலும் அம்மன் போற்றி படிக்க 

வாராஹி அம்மன் நூற்றியெட்டு போற்றி 

கருத்துரையிடுக

0 கருத்துகள்