துக்க நிவாரண அஷ்டகம்

 துக்க நிவாரண அஷ்டகம்

துக்க நிவாரண அஷ்டகம்

1

மங்கள ரூபினி மதியணி

சூலினி மன்மத பாணியளே

சங்கடம் நீங்கிட சடுதியில் வந்திடும்

சங்கரி சௌந்திரியே

கங்கன பாணியன் கனிமுகம்

கண்டநல் கற்பக காமினியே

ஜெய ஜெய சங்கரி கெளரி

க்ருபாகரி துக்க நிவாரணி

காமாட்சி

2

கானுறு மலரெனக் கதிரொளி

காட்டி காத்திட வந்திடுவாள்

தானுரு தவஒலி தாரொளி மதியொளி

தாங்கியே வீசிடுவாள்

மானுரு விழியால் மாதவர்

மொழியால் மாலைகள் சூடிடுவாள்

ஜெய ஜெய சங்கரி கெளரி

க்ருபாகரி துக்க நிவாரணி

காமாட்சி

3

சங்கரி சௌந்தரி சதுர்முகன்

போற்றிட சபையினில் வந்தவளே

பொங்கரி மாவினில் பொன்னடி

வைத்துப் பொரிந்திட வந்தவளே

என் குலம் தழைத்திட எழில்

வடிவுடனே எழுந்தனல் துர்க்கையளே

ஜெய ஜெய சங்கரி கெளரி

க்ருபாகரி துக்க நிவாரணி

காமாட்சி

4

தண தண தண் தண தவிலொலி

முழங்கிட தண்மணி நீ வருவாய்

கண கண கண் கண கதிர் ஒலி

வீசிட கண்மணி நீ வருவாய்

பண பண பம் பண பறை ஒலி

கூவிட பண்மணி நீ வருவாய்

ஜெய ஜெய சங்கரி கெளரி

க்ருபாகரி துக்க நிவாரணி

காமாட்சி

5

பஞ்சமி பைரவி பர்வத புத்ரி

பஞ்சனல் பாணியளே

கொஞ்சிடும் குமரனை குணமிகு

வேலனை கொடுத்தனல் குமரியளே

சங்கடம் தீர்த்திட சமரது

செய்தனால் சக்தி எனும் மாயே

ஜெய ஜெய சங்கரி கெளரி

க்ருபாகரி துக்க நிவாரணி

காமாட்சி

6

எண்ணியபடி நீ அருளிட வருவாய்

என் குல தேவியளே

பண்ணிய செயலின் பலனது

நலமாய் பல்கிட அருளிடுவாய்

கண்ணொளி அதனால்

கருணையை காட்டி கவலைகள்

தீர்ப்பவளே

ஜெய ஜெய சங்கரி கெளரி

க்ருபாகரி துக்க நிவாரணி

காமாட்சி

7

இடர் தரும் தொல்லை இனிமேல்

இல்லை என்று நீ சொல்லிடுவாய்

சுடர் தரும் அமுதே சுருதிகள் கூறி

சுகமதை தந்திடுவாய்

படர் தரும் இருளில் பரிதியாய்

வந்து பழவினை ஓட்டிடுவாய்

ஜெய ஜெய சங்கரி கெளரி

க்ருபாகரி துக்க நிவாரணி

காமாட்சி

8

ஜெய ஜெய பாலா சாமுண்டீஸ்வரி

ஜெய ஜெய ஸ்ரீதேவி

ஜெய ஜெய துர்கா ஸ்ரீபரமேஸ்வரி

ஜெய ஜெய ஸ்ரீதேவி

ஜெய ஜெய ஜெயந்தி மங்கள காளி

ஜெய ஜெய ஸ்ரீதேவி

ஜெய ஜெய சங்கரி கெளரி

க்ருபாகரி துக்க நிவாரணி

காமாட்சி

 

புகைப்படம் உதவி : -

Sonika Agarwal

unplash.com

சிவனே சக்தி சக்தியே சிவம்


கருத்துரையிடுக

0 கருத்துகள்