மற்றவர்களின் குற்றங்களை மன்னிப்பது மனிதத்தன்மை.மறப்பது தெய்வத்தன்மை.
இன்பம், துன்பம் கலந்தது தான் வாழ்க்கை.எதையும் தாங்கும் இதயம் இருந்தால் அமைதியுடன் வாழ முடியும்.
பசுக்கள், வேதங்கள், கற்பு நெறி தவறாதவர், சத்தியவழி நடப்பவர் துறவியர், தரும சிந்தனை கொண்டவர் ஆகியோரால் தான் இந்தப் பூமி இடைவிடாமல் சுற்றுகிறது.
நிலவால் இரவும், சூரியனால் பகலும் ஒளி பெறுகிறது.நல்ல பிள்ளைகளால் குடும்பம் ஒளி பெறுகிறது.
ஒருவர் செய்த தருமச்செயலால் மண்ணுலகமும், விண்ணுலகமும் ஒளி பெறும்.
குணமுள்ள மனைவி, மழலை மாறாத குழந்தை, உழைப்பில் கிடைத்த செல்வம் ஆகியவை அமிர்தத்திற்கு ஈடானவை.
பசிக்கு உணவும், தாகத்திற்கு தண்ணீரும் தரும் தானத்திற்கு இணை வேறில்லை.
ஆறுமுறை பூமியை வலம் வருதல், பத்தாயிரம் முறை காசியில் நீராடல் நூறுமுறை ராமேஸ்வரத்தில் குளித்தல் போன்ற புண்ணிய பலன்கள், பெற்ற தாயை ஒருமுறை வணங்கினால் கிடைக்கும்.
பாம்புக்குப் பால் வார்த்தாலும் அது விஷம் தான் கொடுக்கும்.கீழ்த்தரமான மனிதருக்கு உதவி செய்தாலும் தீமையே ஏற்படும்.நல்லவர் நட்பால் மனதில் அமைதி உண்டாகும்.
தவம் செய்யக் காட்டுக்குப் போகவோ, பட்டினி கிடக்கவோ வேண்டாம் குடும்பத்தில் மனைவி, மக்களுடன் வாழ்வதே சிறந்த தவம் தான்.
கீழ் நோக்கிப் பிடித்தாலும் தீப்பந்தம் மேல் நோக்கியே எரியும்.அதுபோல உயர்ந்த மனம் படைத்தவர்கள் செல்வத்தில் தாழ்ந்தாலும் எண்ணத்தால் உயர்ந்து நிற்பர்.
மேலும் படிக்க
0 கருத்துகள்