சென்னை முகபேர் “ஸ்ரீ சந்தான ஸ்ரீநிவாச பெருமாள்” கோவிலில் கண்ட முத்தான வாசகங்கள்.
ஓம் நமோ நாராயணாய |
சூரியன் முதல் கேது வரை ஒன்பது 1
மேஷம் முதல் மீனம் வரை ராசிகள் பனிரெண்டு
அசுவதி முதல் ரேவதி வரை இருபத்தியேழு
இந்த மூன்று மண்டலங்கள் கூட்டு தொகைதான் நாற்பத்திஎட்டு
எந்தச் செயல் வெற்றியடையவும் மேற்கூறிய மூன்று
மண்டலாதிபதிகள் துணை நிற்க வேண்டும்.ஆகவேதான் மண்டல பூஜை உருவாயிற்று.
வாழ்க்கை
மனிதன் சொல்ல இறைவன் கேட்பது – திருவாசகம்.
இறைவன் சொல்ல மனிதன் கேட்பது – கீதை.
மனிதன் சொல்ல மனிதன் கேட்பது - குறள்.
அருளாளன் சொல்ல ஞானிகள் கேட்பது – திருவட்பா. 2
ஞானி சொல்ல ஞானிகள் கேட்பது –திருமந்திரம்.
மகன் சொல்ல மகேசன் கேட்பது –பிரணவம்.
மனைவி சொல்லக் கணவன் கேட்பது –வாழக்கை.
விடாமுயற்சி
மிகப்பெரிய சாதனைகள் சாதிக்கப்படுவது வலிமையினால்அல்ல 3
விடாமுயற்சியால்தான்.
செயல்கள்
நாம் நம் செயல்களைத் தீர்மானிக்கிறோம்.
நம் செயல்கள் நம்மைத் தீர்மானிக்கின்றன. 4
பொறுமை
தண்ணீரையும் சல்லடையில் எடுத்துச் செல்லலாம். பனிக்கட்டியாக அது 5
உறையும் வரை பொறுத்திருப்போமேயானால்.
நற்குணம்
விட்டுக் கொடுப்பவன் கெட்டுப்போவதில்லை 6
கெட்டுப் போனவன் விட்டுக் கொடுப்பதில்லை.
எதிர்ப்பார்ப்பு
கடமையைச் செய்யுங்கள்
பலனை எதிர்பாருங்கள்
மனிதர்களடத்தில் அல்ல 7
இறைவனிடத்தில்.
வெற்றி
விழித்து எழந்தவுடன் கிடைப்பதல்ல வெற்றி 8
விழுந்து எழந்தப்பின் கிடைப்பது வெற்றி.
மூலதனம்
வெறும் கை என்பது மூடத்தனம் 9
உன் விரல்கள் பத்தும் மூலதனம்.
பாதியும் இரட்டிப்பும்
துன்பத்தைப் பகிர்ந்து கொண்டால் பாதியாகிவிடும். 10
இன்பத்தைப் பகிர்ந்து கொண்டால் இரட்டிப்பாகிவிடும்.
உயர்வானவை
பிராத்தனை செய்யும் உதடுகளைவிட 11
பிறர்க்கு உதவிடும் கரங்கள் உயர்வானவை.
முயற்சியின்மை
முயலும் வெற்றிபெறும் 12
ஆமையும் வெற்றிபெறும்
முயலாமை ஓன்றுதான் வெற்றிபெறாது.
அனுபவம்
அறுபது சொல்வது அனுபவ நிஜம் 13
அதை இருபது கேட்டால் ஜெய்ப்பது நிஜம்.
நாகாக்க காவாக்கால்
கோபமாய் பேசினால் குணத்தை இழப்பாய்
வேகமாய் பேசினால் அர்த்தத்தை இழப்பாய்
அதிகமாய் பேசினால் அமைதியை இழப்பாய் 14
ஆணவமாகப் பேசினால் அன்பை இழப்பாய்
வெட்டியாகப் பேசினால் வேலையை இழப்பாய்
பொய்யைப் பேசினால் பெயரை இழப்பாய்
சிந்தித்து பேசினால் சிறப்பாய் இருப்பாய்.
ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணாய
மேலும் படிக்க
# பொன்மொழிகள்
திரு முருக கிருபானந்தவாரியார் வைர சொற்கள்
https://sivaneysakthi.blogspot.com/2019/11/blog-post.html
0 கருத்துகள்