| ஓம் சாய்ராம் |
ஓம் அப்பனே போற்றி
ஓம் அன்னை வடிவினனே போற்றி
ஓம் அன்பு வடிவானவனே போற்றி
ஓம் அறிவுறுத்துபவனே போற்றி
ஓம் அற்புதம் படைத்தவனே போற்றி
ஓம் அபயக் கரத்தோனே போற்றி
ஓம் அமரர்க்கோனே போற்றி
ஓம் அகம் உறைபவனே போற்றி
ஓம் அசகாய சூரனே போற்றி
ஓம் அசுர நாசகனே போற்றி
ஓம் அசவுகர்ய நாசகனே போற்றி
ஓம் அணுவணுவானவனே போற்றி
ஓம் அமுத விழியோனே போற்றி
ஓம் அரங்க நாயகனே போற்றி
ஓம் அன்னம் அளிப்பவனே போற்றி
ஓம் அருவமானவனே போற்றி
ஓம் அனைத்தையும் உடையோனே போற்றி
ஓம் அறத்தை போதித்தவனே போற்றி
ஓம் அபயம் தருபவனே போற்றி
ஓம் அச்சம் தீர்ப்பவனே போற்றி
ஓம் அச்சம் தவிர்ப்போனே போற்றி
ஓம் ஆதாரமானவனே போற்றி
ஓம் ஆனந்தம் அளிப்பவனே போற்றி
ஓம் ஆயிரம் கதிரொளி கொண்டவனே போற்றி
ஓம் ஆபத்பாந்தவனே போற்றி
ஓம் ஆணவம் அறுப்பவனே போற்றி
ஓம் இக பர சுகம் அருள்பவனே போற்றி
ஓம் இமையவனே போற்றி
ஓம் இங்கித குணத்தினனே போற்றி
ஓம் இம்மையில் அருள்பவனே போற்றி
ஓம் இருள் நீக்குவோனே போற்றி
ஓம் இச்சா சக்தியே போற்றி
ஓம் கிரியா சக்தியே போற்றி
ஓம் ஈகை கொண்டவனே போற்றி
ஓம் ஈடில்லா புகழோனே போற்றி
ஓம் ஈர நெஞ்சினேனே போற்றி
ஓம் மகேசுவரனே போற்றி
ஓம் உயிராய் நிற்பவனே போற்றி
ஓம் உவகை அளிப்பவனே போற்றி
ஓம் உண்மை பொருளானவனே போற்றி
ஓம் ஊழ்வினை அறுப்பவனே போற்றி
ஓம் உலகைக் காப்பவனே போற்றி
ஓம் உவகை தருபவனே போற்றி
ஓம் உளமதை அறிபவனே போற்றி
ஓம் எளியோருக்கு எளியவனே போற்றி
ஓம் எல்லையில்லாப் பொருளே போற்றி
ஓம் எமபயம் நீக்குவோனே போற்றி
ஓம் எந்தையாயிருப்பவனே போற்றி
ஓம் ஐயம் களைபவனே போற்றி
ஓம் ஒப்பில்லாதவனே போற்றி
ஓம் ஓங்கார ரூபனே போற்றி
ஓம் ஓங்கி நிற்கும் புகழோனே போற்றி
ஓம் ஓளடதமானவனே போற்றி
ஓம் சாயிநாதனே போற்றி
ஓம் ஷீரடி உறைந்தவனே போற்றி
ஓம் சீர்மிகு புதல்வனே போற்றி
ஓம் வலியோருக்கு வலியனே போற்றி
ஓம் வல்வினை முடிப்பவனே போற்றி
ஓம் விட்டலின் வடிவே போற்றி
ஓம் சுவாமியே போற்றி
ஓம் பாபா போற்றி
ஓம் பாதமலரோன் போற்றி
ஓம் பொற்பாதனே போற்றி
ஓம் கருணையின் இருப்பிடமே போற்றி
ஓம் ராமானந்த சீடனே போற்றி
ஓம் வேம்பு நிழல் அமர்ந்தோனே போற்றி
ஓம் வேதம் புரிந்தவனே போற்றி
ஓம் வேட்கை தீர்பபவனே போற்றி
ஓம் தீராத் துயர் தீர்ப்போனே போற்றி
ஓம் தீரர்க்கும் தீரனே போற்றி
ஓம் நற்குணனே போற்றி
ஓம் விற்பன்னனே போற்றி
ஓம் தீ வினைகள் போக்குவோனே போற்றி
ஓம் மகிமைகள் புரிந்தவனே போற்றி
ஓம் மகத்துவமானவனே போற்றி
ஓம் மங்கள ரூபனே போற்றி
ஓம் மறை அறிந்தவனே போற்றி
ஓம் மாண்பு பொருந்தினை போற்றி
ஓம் மாதவத்தோனே போற்றி
ஓம் மகிமைகள் புரிபவனே போற்றி
ஓம் மஹா யோகியே போற்றி
ஓம் மறுமையில் அருள்பவனே போற்றி
ஓம் நீரில் சுடர் எரித்தோனே போற்றி
ஓம் நீதியை புகட்டினன் போற்றி
ஓம் கொடைக் குணத்தோனே போற்றி
ஓம் நிறை குணத்தோனே போற்றி
ஓம் குறை தீர்ப்பவனே போற்றி
ஓம் ஞான சக்தியே போற்றி
ஓம் ஞாலம் தெரிந்தவனே போற்றி
ஓம் ஞானச் சுடரொளியே போற்றி
ஓம் சத்குரு சாய்ராம் போற்றி
ஓம் சாகித்தியம் அருள்பவனே போற்றி
ஓம் சிகரம் அமர்ந்தவனே போற்றி
ஓம் சுத்த ஆனந்தனே போற்றி
ஓம் சூதறுப்பவனே போற்றி
ஓம் சூன்யம் களைபவனே போற்றி
ஓம் செம்மலரடியோனே போற்றி
ஓம் சங்கடம் தீர்ப்பவனே போற்றி
ஓம் சச்சிதானந்தனே போற்றி
ஓம் பண்பின் வடிவானனே போற்றி
ஓம் பலம் அருள்வோனே போற்றி
ஓம் பக்திக்கு அருள்வாய் போற்றி
ஓம் நன்மைகள் தருபவனே போற்றி
ஓம் பீடை ஒழிப்பவனே போற்றி
ஓம் பஞ்சம் தடுப்போனே போற்றி
ஓம் ஓம் பகைமை குணம் நீக்குவோனே போற்றி
ஓம் விந்தைகள் புரிந்தோனே போற்றி
ஓம் நிர்மல வடிவினனே போற்றி
ஓம் சாய்ராம் ஸ்ரீ சாய்ராம் சத்குரு சாய்ராம் ஜெய் ஜெய் சாய்ராம்
ஓம் சாய்ராம் ஸ்ரீ சாய்ராம் சத்குரு சாய்ராம் ஜெய் ஜெய் சாய்ராம்
ஓம் சாய்ராம் ஸ்ரீ சாய்ராம் சத்குரு சாய்ராம் ஜெய் ஜெய் சாய்ராம்
திருப்பதி ஏழுமலையான் நூற்றியெட்டுபோற்றி

0 கருத்துகள்
நன்றி என் வலைப்பதிவைப் படித்தமைக்கு
இந்தப் பதிவைப் படிக்கும்
“ வாசகர் - வாசகிகள்“ அனைவரும்
இந்தப் பதிவின் கீழ் இருக்கும்
“ பின்னூட்டம் பெட்டி“ (comment box) யில்
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.
வேண்டுகோள் இது