அபிராமி அன்னை அந்தாதி

உ 
அபிராமி அன்னை அந்தாதி

தனம் தரும்

கல்வி தரும்

ஒரு நாளும் தளர்வு அறியா

மனம் தரும்

தெய்வ வடிவும் தரும்

நெஞ்சில் வஞ்சம் இல்லா

இனம் தரும்

நல்லன எல்லாம் தரும்

அன்பர் என்பவர்க்கே

க்னம் தரும்

பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே

 

பாடல் பொருள்

தனம் தரும் - எல்லாவிதமான செல்வங்களும் தரும்

கல்வி தரும் - எல்லாவிதமான கல்வியையும் தரும்

ஒரு நாளும் தளர்வு அறியா மனம் தரும் - என்றும் சோர்ந்து போகாத மனமும் தரும்

தெய்வ வடிவும் தரும் - தெய்வீகமான உருவத்தையும் தரும்

நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும் - உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத நண்பர்களைத் தரும்

நல்லன எல்லாம் தரும் - இன்னும் என்ன என்ன நன்மைகள் எல்லாம் உண்டோ அவை அனைத்தையும் தரும்

அன்பர் என்பவர்க்கே க்னம் தரும் - எல்லோரிடமும் அம்மையிடமும் அன்புடன் இருக்கும் அன்பர்களுக்கு எல்லா பெருமையையும் தரும்

பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே - பூவினைச் சூடிய கூந்தலையுடைய அபிராமி அன்னையின் கடைக்கண் பார்வையே.

மிகவும் பிரபலமான பாடல் இது. அபிராமி அந்தாதி பாடல் என்று தெரியாமலேயே பலருக்கும் இந்தப் பாடல் தெரிந்திருக்கும். அருமையான பாடலும் கூட.  

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி

 

சிவனே சக்தி சக்தியே சிவம்

 

மேலும் படிக்க 

துர்க்கையம்மன் நூற்றியெட்டு போற்றி

https://sivaneysakthi.blogspot.com/2016/08/blog-post_1.html

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்