கணபதி கவி

உ 

கணபதி கவி


கருணைக் கடலே

கற்பக விநாயகனே

காத்தருள்வாய்

காத்தவராயனே

காலம் முழுதும்

காத்திடுவாய்

கணபதியே

கண் திறந்து

கருணையை

காட்டிடுவாய்

கணேசனே

கனிந்திடுவாய்

கயிலையின் புதல்வனே

கரம் குவிப்பேன் என் நாளும்

கற்பக விநாயகனே

 

கணபதியை வழிபடுவது என்பது அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று.

செல்லும் வழியெல்லாம் இவர் ஆலயம் தென்படும்.

வீட்டில் வழிபட  மறந்தாலும் செல்லும் வழியில் தென்படும் கணபதி

ஆலயத்தை வணங்கினாலே கணபதியை நாம் வணங்கியதுப்

போல் நம் மனம் மகிழ்ச்சியில் திளைக்கும்.நமக்குத் தெரிந்த மொழியிலே 

நமக்குத் தெரிந்த கணபதி பாடலை மனதுக்குள் பாராயணம் செய்து 

கணபதியை வணங்கி நம்மையும் நாமே  மகிழ்ச்சிக்கு உட்ப்படுத்தி

கொள்ளலாம்.கீழ்க் கண்ட மிக எளிமையான பாடல்களைக்

கணபதியை நோக்கிப் பாடலாம்.

 

கணபதி பாடல்கள் 

பிடி அதன்உரு உமை கொளமிகு கரியது

வடிகொடு தனதடி வழிபடும் அவர்இடர்

கடிகணபதி வர அருளினன் மிகுகொடை

வடிவினர் பயில் வலி வலமுறை இறையே!

திகட  சக்கரச் செம்முகம் ஐயந்துளான்

சகட சக்கரத் தாமரை நாயகன்

அகட சக்கர விண்மணியாவுறை

விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்!

மண்ணுல கத்தினிற் பிறவி மாசற

எண்ணிய பொருளெலாம் எளிதின்

முற்றுறக்

கண்ணுதல் உடையதோர் களிற்றுமா முகப்

பண்ணவன் மலரடி  பணிந்து போற்றுவோம்!

வாக்கு  உண்டாம் நல்லமனமுண்டாம்

மாமலராள் நோக்கு உண்டாம், மேனி

நுடங்காது

பூக்கொண்டு துப்பார் திருமேனித்

தும்பிக்கையான்

பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு!

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை

நாளும் கலந்து உனக்கு நான் தருவேன்

கோலம் செய் துங்கக் கரி முகத்துத்

தூமணியே நீ

எனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா!

ஐந்து கரத்தனை ஆணை முகத்தனை

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை

நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்

புந்தியில் வைத்து அடிபோற்றுகின்றேனே!

அல்லல்போம், வல்வினைபோம, அன்னை

வயற்றில்

பிறந்ததொல்லை போம், போகாத் துயரம்

போம்,

நல்ல குணமதிகமாம் அருணை கோபுரத்துள்

மேவும்

கணபதியைக் கைதொழுதக் கால்!

முன்னவனே!யானை முகத்தவனே

முத்திநலம்

சொன்னவனே!தூய மெய்ச் சுகத்தவனே!

மன்னவனே! சிற்பரனே!ஐங்கரனே!

செஞ்சடையஞ் சேகரனே! தற்பரனே!

நின்தாள் சரண்!

யானை முகத்தான் பொருவிடையான்சேய்

அழகார்

மான மணிவண்ணன் மாமருகன்

மேனிமுகம்

வெள்ளக் குமிழி மதத்து விநாயகன் என்

உள்ளக் கருத்தின் உளன்!

திருவிரட்டை மணிமாலை

விநாயகனே வேட்கை தணிவிப்பான்-

விநாயகனே

விண்ணிற்க்கும் மண்ணிற்க்கும்

நாதனுமாம் தன்மையினால்

கண்ணீற் பணிமின் கணிந்து

 

சிவனே சக்தி சக்தியே சிவம்

மேலும் கணபதி  போற்றி பாட 

நூற்றியெட்டு கணபதி போற்றி

https://sivaneysakthi.blogspot.com/2019/09/blog-post_29.html

கருத்துரையிடுக

0 கருத்துகள்