கோமாதா என் குலமாதா
பசுவை வணங்குவதால்
அனைத்து கடவுள்களையும்
பூஜித்தப் பலன் கிடைக்கும்.
பால், நெய், தயிர், கோமியம், சாணம்
இவற்றிலிருந்து தயாரிக்கப்படுவதே
"பஞ்சகவ்யம்" என்றழைக்கப்படுகிறது.
காமதேனுவை வழிப்பட்டால்
முப்பத்து முக்கோடி தேவர்களை
வணங்கியதாகப் பலன்.
பெரிய ஆலயங்களில் "கோப்பூஜை" காலை வேளைகளில் நடைபெறுகிறது.
கோப்பூஜைகளில் கலந்து கொண்டு கோமாதாவின் அருளை பெறலாம்.
நாம் வசிக்கும் இல்லத்தில் இடவசதி மற்றும் சேவை மனப்பான்மை
உள்ளவர்கள் பசுவைக் கண்டிப்பாக வளர்க்கலாம்.அதற்கு 'லட்சுமி'என்று பெயர் வைத்து வளர்த்து வணங்கலாம்.
கோபுரம் தரிசனம் கோடி புண்ணியம்
என்று சொல்வதைப் போல்
கோமாதாவை வணங்குவதும்
கோடி புண்ணியம்.
ஓம் கோமாதா போற்றி
ஓம் நந்திகேஸ்வரரே போற்றி
ஓம் காமதேனுவே போற்றி
மாட்டுப் பொங்கலுக்கு மட்டும்
கோமாதாவை வழிப்படுவது என்று
வழக்கமில்லை.எக்காலத்திலும்
போற்றப்படக்கூடிய தெய்வங்களிலும்
கோமாதா வழிப்பாடும் ஒன்று.
கோமாதாவின் உடலில் குடியிருக்கும்
தெய்வங்கள்.
மத்திய முகத்தில் சிவன்
வலது க் கண் சூரியன்
இடக் கண் சந்திரன்
வலப்புற மூக்கு முருகன்
இடப்புற மூக்கு விநாயகர்
காதுகள் அஸ்வினி குமாரர்
மேல்புறக் கழுத்து ராகு
கீழ்ப்புறக் கழுத்து கேது
கொண்டை பிரம்மன்
மேற்புற முன் கால்கள்
சரஸ்வதி மற்றும் விஷ்ணு
முன் புற வலது க் கால் பைரவர்
முன் புற இடது க் கால் ஆஞ்சநேயர்
மேல்பகுதி பின்னங் கால்கள்
நாரதர் மற்றும் வசிஷ்டர்
பின்னங் கால்கள்
விசுவாமித்திரர் மற்றும் ப்ராசரர்
மேற்புற பிட்டம் லட்சுமி
கீழ்புற புட்டம் கங்கை
முதுகில் பரத்வாஜர், குபேரர், வருணண் மற்றும் அக்னி தேவன்
வயிற்றுப்பகுதி ஜனக குமாரரர்கள் மற்றும் பூமாதேவி
மேல்பகுதி வாலில் நாகராஜர்
கீழ்ப்பகுதி வாலில் ஸ்ரீமானார்
கொம்பு வலது வீமன்
கொம்பு இடது இந்திரன்
குளம்பு முன் வலம் விந்தியமலை
குளம்பு இடப்பக்கம் இமயமலை
குளம்பு பின் வலம் மந்திரமலை
குளம்பு இட வலம் த்ரோணமலை
பால் சுரக்கும் மடி அமுதக்கடல்
ஐந்து கோமாதாக்கள் பெயர்கள்
1 அவைநந்தா
2 பத்திரை
3 சுரபி
4 சுசீலை
5 சுமனை
கோமாதா பூஜையின் பலன்கள்
குழந்தைப் பேறு
செல்வ செழிப்பு
பாவம் நீங்கும்
தீய சக்திகள் நெருங்கா
குறையில்லா கல்வி
கோமாதாவை வணங்குவதால் பலன்கள்
முப்பத்து முக்கோடி தேவர்கள், ரிஷிகள், அஷ்டவசுக்கள் மற்றும்
நவகிரகங்களை வழிப்பட்ட பலன்கள்
கோமாதாவை தினம் வழிப்படுவோம்
வாழ்வில் பேரின்பம் அடைவோம்
மகாலட்சுமி அருள் பெற

0 கருத்துகள்
நன்றி என் வலைப்பதிவைப் படித்தமைக்கு
இந்தப் பதிவைப் படிக்கும்
“ வாசகர் - வாசகிகள்“ அனைவரும்
இந்தப் பதிவின் கீழ் இருக்கும்
“ பின்னூட்டம் பெட்டி“ (comment box) யில்
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.
வேண்டுகோள் இது