சிவ சிவ
நமச்சிவாயனே –உன்
விசுவரூப தரிசனம் தினம் தினம்
எனக்கு அருளிட
வரம் அருள்வாய்
நமச்சிவாயனே
நற்றுணையாவது நமச்சிவாயவே
அன்பே அருள் சிவமே துணை
நின் திருவடியே
எமக்குத் திருவருள்
சிவ சிவ
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
அண்ணாமலை எம் அண்ணா போற்றி
கண்ணாரமுதக் கடலே போற்றி
சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
பராய்த்துறை மேவிய பரனே போற்றி
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
சீரார் திருவையாறா போற்றி
ஏகம்பத்துறை எந்தாய் போற்றி
பாகம் பெணுரு ஆனாய் போற்றி
தென்தில்லை மன்றினுள் ஆடிப் போற்றி
இன்றெனக்கு ஆரமுதானாய் போற்றி
குவளைக் கண்ணி கூறன் காண்க
அவளுந் தானும் உடனே காண்க
காவாய் கனகத் திரளே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
திருசிற்றம்பலம் திருசிற்றம்பலம்
திருமந்திரம்
அவனை ஒழிய அமரரும் இல்லை
அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை
அவனன்றி ஊர்புகு மாறு அறியேனே
சிவபெருமானைக் காட்டிலும் மேலான தெய்வமில்லை.
சிவபெருமானை நோக்கிச் செய்யும் தவத்தைக் காட்டிலும்
சிறந்த தவம் ஏதுமில்லை.சிவபெருமான் அருள் இல்லாமல்
படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய தொழில்கள் இல்லை
சிவபெருமான் இல்லாமல் முக்தி அடையும் வழியையும் நானறிவேன்.
மாணிக்கவாசகர் அருளியது
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யான்எனது என்று அவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே.
பிரதோச மந்திரம்
குனித்த புருவமும் கொவ்வை செவ்வாயில் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியில் பால் வெண்ணீறும்
இனித்தமுடனே எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்
மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே.
சுந்தரர் அருளியது
பித்தா பிறைசூடி பெருமானே அருளாளாய்
எத்தால் மறவாதே நினைக்கின்றேன்
மனத்துன்னை வைத்தாய் பெண்ணை
தென்பால் வெண்ணெய் நல்லூரருட்துறையுள்
அத்தாவுனக்காளாயினி
அல்லேன் எனலாமே…!


0 கருத்துகள்
நன்றி என் வலைப்பதிவைப் படித்தமைக்கு
இந்தப் பதிவைப் படிக்கும்
“ வாசகர் - வாசகிகள்“ அனைவரும்
இந்தப் பதிவின் கீழ் இருக்கும்
“ பின்னூட்டம் பெட்டி“ (comment box) யில்
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.
வேண்டுகோள் இது