தொண்டரடிப் பொடியாழ்வார் பாசுரம்
பச்சை மா மலைபோல் மேனி
பவள வாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம்
கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான் போய்
இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்க மா நகர் உளானே
மற்றொருவர் இல்லை
பாரில் நின் பாதமூலம்
பற்றிலேன் பரமமூர்த்தி
காரொளி வண்ணனே
கண்ணனே கதறுகின்றேன்
ஆருளர் களை கண் அம்மா
அரங்கமாநகருளானே
கங்கையில் புனிதமாய்
காவேரி நடுவுபட்டு
பொங்கு நீர் பரந்து
பாயும் பூம்பொழில்
அரங்கம் தன்னுள்
எங்கள் மால்
இறைவன் ஈசன்
கிடந்ததோர் கிடக்கை கண்டு
எங்ங்னம் மறந்து வாழ்வேன்
ஏழையேன் ஏழையேனே
- தொண்டரடிப் பொடியாழ்வார்
குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படு
துயர் ஆயின எல்லாம்
நிலம் தரும் செய்யும் நீள் விசும்பு அருளும்
அருளோடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும்
ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
நாராயணா என்னும் நாமம்
- திருமங்கையாழ்வார்.
ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணாய
மேலும் படிக்க
சிவபுராணம் – திருவாசகம் பாடல் வரிகள்
https://sivaneysakthi.blogspot.com/2019/12/blog-post.html
0 கருத்துகள்